சிவகிரியில் தூய்மைப் பணியாளா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள பாலகணேசன் தெருவைச் சேர்ந்த அனந்தப்பன் மகன் கணேசன் (49) என்பவர், சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக உள்ளார். கணேசன் ஆஸ்துமா பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தாராம்.

 இந்நிலையில், அவர் அதிகாலை மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்று, தென்னை மரத்துக்கான பூச்சிக்கொல்லி மருந்தைத் தின்றுவிட்டு, மனைவிக்கு தகவல் தெரிவித்தாராம். அங்கிருந்தோர் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி