இதேபோல் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மையத்தில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்வி குழும நிறுவனர் எஸ். தங்கப்பழம் தொடங்கி வைத்தார்.
மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் கவிதா, மாணவிகள் லோகேஸ்வரி, அபிஸ்ரீவர்ஷினி, சண்முகபிரியா ஆகியோர் பேசினார்கள். இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.