தென்காசி: எரிந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு; போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் நீர்சேர்நதி ஆற்றுப்படுகையில் மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தனர். அப்போது மனித எலும்புக்கூடு ஆணா பெண்ணா என்ற கோணத்திலும், யாரேனும் இரவு நேரத்தில் ரகசிய யாகம் நடத்தி மனித உடல்களை தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரசித்தி பெற்ற ஆற்றுப்படுகையில் மனித எலும்புக்கூடு தீ எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி