தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள வடக்கத்தி அம்மன் திருக்கோவிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது அத்தொடர்ந்து நேற்று இரவு கொடைவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு ரதவீதி தெற்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் அக்கினிச்சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிவலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.