சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னகாவு மகன் காளீஸ்வரன் (44). அவர் முகவூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து பைக்கில் வடுகபட்டி சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில் காளீஸ்வரன் கீழே விழுந்து காயம் அடைந்தார். 

சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி