கல்யாணிபுரம்: கடையம் வட்டார தலைமையாசிரியர்கள் கூட்டம்

கல்யாணிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார அளவிலான நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் இன்று வட்டார கல்வி அலுவலர் லோகநாதன் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு ஆயத்தப்படுத்துவது மற்றும் பயிற்சி வழங்குவது சார்பாக கருத்துக்கள் எடுத்துக் கூறினார். 

புங்கம்பட்டி பள்ளி ஆசிரியர் பெர்க்மான்ஸ் தங்கள் பள்ளியில் NMMS பயிற்சிக்கு எடுத்து வரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் பற்றி எடுத்துக் கூறினார். லட்சுமியூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் மாணவர்களை NMMS பயிற்சியில் வெற்றி பெற செய்ய பெற்றோர்களின் ஒத்துழைப்பினை பெறும் விதம் பற்றி கூறினார். ஞானம் மறவா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் இக்கல்வியாண்டில் கடையம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் NMMS தேர்வு எழுத ஆக்கப்பூர்வமான வழிகாட்டலை வழங்கினார். இரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் கடையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் NMMS பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி