தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு கோட்டமலை ஆறு மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோட்டமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் பிரதான பைப் லைனில் மண், கல் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடிநீர் வாரிய ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன், ஆணையர் நாகராஜ் ஆகியோர் வனப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.