சங்கரன்கோவில் திரெளபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர்நகர் 2வது தெருவில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கால திருவிழா நாலாம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண நிகழ்ச்சி, கரகம் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா 10ம் திருநாளான நேற்று ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 

அப்போது பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், குருவிகுளம் தெற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் செங்குந்தர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி