சிவகிரி பகுதியில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்துறையினா் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சிவகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த விளைபொருள்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினா் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி