யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள நெல், தென்னை, கரும்பு போன்ற விளைபொருள்களை யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி வருகின்றன. நாரணபுரம் பகுதியில் நள்ளிரவில் புகுந்த யானை ஒன்று 80 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைக் கூட்டங்களை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி