விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி மண்டபம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (68) என்பவர், மே 18ஆம் தேதி ராயகிரி கணபதி ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி