கடையநல்லூரில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

கடையநல்லூர்: முகமது ரபீக், 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் என்பவரிடம் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பித் தராத ரபீக், தனக்குச் சொந்தமான ரூ. 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாகக் கூறி பத்திரம் எழுதி கொடுத்து மேலும் ரூ. 17 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி எனத் தெரியவந்ததும், சந்திரன் விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி