தென்காசி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்புரத்தை அடுத்த சின்னக்குமார்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (87), விவசாயி. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இது கண்ட பகுதி பொதுமக்கள் மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முதியவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி