தென்காசி: திமுக நகர்மன்ற உறுப்பினர் திமுக சேர்மனிடம் வாக்குவாதம் (VIDEO)

சங்கரன்கோவில் 27-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் புனிதா. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் நிலையில் இன்று சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூட்டரங்கில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தனது 27-வது வார்டு பகுதியில் ஒருவேளை கூட நடைபெறவில்லை எனவும் இதனை முன் வைத்தும் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என ஆவேசமாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி-க்கும் நகர்மன்ற உறுப்பினர் புனிதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரண்டு கூட்டத்திற்கு 27 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரை ஒத்தி வைக்கிறேன் என நகர்மன்ற தலைவர் தெரிவித்ததை தொடர்ந்து,

ஒரு வார்டில் வேலை நடைபெறவில்லை என்றும் அதனை கேட்கக்கூட முடியவில்லை நீங்கள் எல்லாம் என்ன சேர்மன் என சொல்லிக்கொண்ட நகர்மன்ற உறுப்பினர் புனிதா அதிமுக நகர்மன்ற துணைத் தலைவருடன் சேர்ந்து கொண்டு ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

திமுகவில் மாவட்ட துணை செயலாளர் உள்ள எனது வார்டு பகுதிக்கு வேலைகள் நடைபெறவில்லை எனவும் மற்ற மக்களுக்கு இவர்கள் எவ்வாறு செய்வார்கள் என்று தெரிவித்த நகர்மன்ற உறுப்பினர் இது குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி