நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல் தற்போது திராவிட முதல்வர் தளபதியார் வரை இஸ்லாமிய சமுதாயத்திற்கு உறுதுணையாக நின்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கண்ணியத்திற்குரிய முகமது ரபீக் ஆலிம்சா துவா செய்து வைத்து நோன்பினை திறந்து வைத்தார். பின்னர் அனைவரும் நோன்பு உணவு உண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணை துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் நகர மாணவரணி துணை அமைப்பாளர் யாசர் அராபத் ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.