அவரது தம்பி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது மது போதையில் வந்த நான்கு இளைஞர்கள் சிக்கன் ஸ்பிரே வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடையில் இருந்தவர் அவருக்கு போன் செய்து அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வந்த அவர்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
மேலும் போதையில் நான்கு பேர் கொண்ட கும்பல் பாட்டிலால் தாக்கியதில் மண்டை உடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.