தென்காசி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சாம்பவர்வடகரையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை தராமலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைத்ததை கண்டித்தும், தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகும் அடிமை அதிமுக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூர் திமுக செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி