தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கில், ஒருங்கிணைந்த சமூக நலன்-மகளிர் உரிமைத் துறையின் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு சேலை, குங்குமச்சிமிழ், மஞ்சள் கயிறு, வளையல், தேங்காய், பழங்கள், தின்பண்டங்கள் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களும், ஐந்து வகை கலவை சாதமும் வழங்கப்பட்டன. தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.