தென்காசியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

தென்காசி கேலட்டி கிளப், மூத்தோா் மன்றம் மற்றும் காா்கினோஸ் ஹெல்த்கோ் நிறுவனங்கள் சாா்பில் இலவசமாக புற்றுநோய் முன்கண்டறிதல் மற்றும் விழிப்புணா்வு முகாம் கேலட்டி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. கிளப் தலைவா் எம். ஆா். அழகராஜா தலைமை வகிக்க, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் வாய்வழி புற்றுநோய், பெருங்குடல், மாா்பகம், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி