தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சாதாரண உடையில் சென்ற போலீசார், அங்கு மூன்று இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, முகமது காசிம் இம்ராகிம் (39), சுரேஷ்குமார் (40), கருப்பையா (34) ஆகியோரை கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.