தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு காலனி பகுதியில் கடையநல்லூர் தாலுகா அய்யாபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி. இதையடுத்து சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரதே பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.