தென்காசி: அரசுப் பள்ளியில் கணினி திருடிய சிறுவர்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சீவதல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் புகுந்த மர்ம நபர்கள், ஜன்னல் கம்பிகளை வளைத்து, சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள கணினிகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுடலை மணி மற்றும் சிவா என்ற இரு சிறுவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடையநல்லூர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி