தென்காசி: 2 பேருக்கு அரிவாள் வெட்டு (VIDEO)

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்மலை வடக்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஞானகுரு அதே ஊரைச் சேர்ந்த வீரபாண்டி என்பவருக்கும் இடையே வாறுகால் தண்ணீர் செல்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் கருப்பையா ஞானகுரு ஆகிய இருவருக்கும் சொந்தமான புஞ்சை நிலத்தில் வீரபாண்டி ஆடு மேய்த்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஞானகுரு மற்றும் கருப்பையா இருவரும் வீரபாண்டியிடம் 'எங்களது நிலத்தில் ஏன் ஆட்டை மேய்கிறாய்' என்று கேள்வி கேட்க, வீட்டிற்குச் சென்று அறிவாளை எடுத்து வந்து ஞானகுருவை வெட்ட முயற்சி செய்துள்ளார். 

அப்போது தந்தை கருப்பையா வீரபாண்டியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது கருப்பையாவுக்கு கை, கால், தொடை போன்ற இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் மகன் ஞானகுருவுக்கும் கழுத்தில் ஒரு வெட்டு விழுந்துள்ளது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவும், வீரபாண்டி அந்த இடத்தைவிட்டு தப்பித்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பவம் அறிந்த சிவகிரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆகிய இருவரையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஞானகுரு மற்றும் கருப்பையா ஆகிய இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி