தூத்துக்குடி: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவை மதிக்காமல் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் தென்பாதம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோரை பணியிட மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு பார் கவுன்சில் குழு உறுப்பினர் த மைக்கேல் ஸ்டேனீஸ் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் செல்வின் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் தொல்காப்பியன் வழக்கறிஞர் எஸ் எஸ் பி அசோக் ரமேஷ் பாண்டியன் அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த போராட்டம் தமிழக முழுவதும் வழக்கறிஞர் சார்பில் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி