தூத்துக்குடி: கனமழையால் வீடு இடிந்து விழுந்து சேதம்

தூத்துக்குடி இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக தாமோதரன் நகர் 1வது தெரு பகுதியில் ராஜா என்பவரது 60 ஆண்டு பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்து வீட்டிற்குள் விழுந்து சேதம் ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி தாமோதரன் நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சைக்கிள் கடை நடத்தி வருகிறார். 

இவருக்கு அந்தப் பகுதியில் 60 ஆண்டு பழமையான வீடு ஒன்று உள்ளது. நேற்று இரவு கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வந்த நிலையில் மழை பெய்ததால் வீடு மோசமான நிலையில் இருந்ததால் சேதமடைந்த வீட்டில் தங்காமல் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சுமார் மூன்று மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீட்டிற்குள் விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக ராஜாவின் குடும்பத்தினர் வீட்டில் தங்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி