விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலர் ரீகன்குமார், தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அரசு நிலத்தை, தனது நிலம் எனக்கூறி கோதர்மைதீன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், 2 ஆண்டுகளாக பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளார். விசாரணையில் இதேபோல் பலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. எஸ். பி. மாதவன் உத்தரவின் பேரில், தென்காசி போலீசார் ரீகன்குமாரை கைது செய்தனர்.