தென்காசி: தேசிய மக்கள் நீதிமன்றம்; 706 வழக்குகளுக்கு தீர்வு

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி எம். சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமை தாங்கினார். 

முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான ஜெ. கிரிஸ்டல் பபிதா, தலைமை குற்றவியல் நீதிபதி சி. கதிரவன், கூடுதல் சார்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. ராஜேஷ் குமார், நீதித்துறை நடுவர் எஸ் முத்துலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. என். குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வட்ட சட்ட பணிகள் குழுவின் உறுப்பினர் ஜெ. ஜெபா மற்றும் வழக்கறிஞர்கள், வழக்குகளில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ரூபாய் 31 கோடியே 11 லட்சத்து 62 ஆயிரத்து 253 மதிப்புள்ள 706 நீதிமன்ற வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி