தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள இராமநதி அணையின் பாதுகாப்பு கருதி அணையின் உள்வரத்து முழுவதும் உபரி நீராக அணையின் கட்டுப்படுத்தப்பட்ட மதகுகளின் வழியாக இராமநதி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இராமநதி ஆற்று தண்ணீர் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலக்கடையம், கீழக் கடையம், ரவண சமுத்திரம், பொட்டல் புதூர், பாப்பான் குளம் கிராமங்கள் வழியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சந்தியாமடம் பகுதியில் உள்ள கடனா ஆற்றில் கலக்கிறது. எனவே இராமநதி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் செய்யவேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.