இளநிலை வருவாய் ஆய்வாளா்-முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயர் மாற்ற அரசாணை யின் அடிப்படையில் விதிதிருந்த ஆணையினை வெளியிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைத்த நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சார்பில் அனைத்து அலுவலக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி பீமராஜா, மாவட்ட இணைச் செயலாளா் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி விளக்கவுரை அளிக்கப் பட்டது. போராட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை அலுவலா் கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.