தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிப்ரவரி 12, 2026 அன்று மாலை 5 மணியளவில் தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிடக் கோரியும், தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் மா. செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இ.யூ.மு.லீக், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.