தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், இசைக் கலைஞரான கருப்பசாமி (38) என்பவர் மே 29 இரவு வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். மே 30 காலை அப்பகுதி மக்கள் அவரை சடலமாக கண்டனர். சங்கரன்கோவில் டவுன் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.