தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழத்திருவேங்கடத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிமுத்து (எ) அஜித் (30) என்பவர், மகேந்திரன் வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு செல்போன் திருடியதாகக் கூறப்படுகிறது. மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவேங்கடம் காவல் நிலைய போலீஸார் காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று (மே 6) காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.