தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதற்கான பயிற்சி முகாம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திமுக பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம், திட்டத்தின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகளை விளக்கும் வகையில் அமைந்தது.