தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் உள்ள அழகனேரி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சார்ந்தவர்கள் பிளக்ஸ் பேனரை போலீசார் அகற்ற முயன்றனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளக்ஸ் பேனரை வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர். பேச்சுவார்த்தைப் பின்பு சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.