அவர் பட்டா பெயர் மாற்ற செய்ய ரூ 13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் தன்னால் தர இயலாது எனக் கூறிய போது பணம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தென்காசி மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் கருப்பசாமி புகார் அளித்தார்.
புகாரினை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினார் கொத்தனார் கருப்பசாமி, விஏஓ விஜயகுமாரை அணுகி ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்த போது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.