இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜனவரி 12) காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை சுவாமி அம்பாள் தேரில் ஏறி வந்தார்கள். இதைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. கோவில் முன்பு நடைபெற்ற தேர் முக்கிய வீதிவழியாக மீண்டும் கோவில் முன்பு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.