தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பயனாளிகளுக்கு கடன் உதவி நலத்திட்டங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.