திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடினார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற உறுப்பினர் கௌசல்யா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி