தென்காசி: நடை பயிற்சி தளம் -ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு அங்கமான நடப்போம் நலம் பெறுவோம் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி இடமான குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேற்று 01. 06. 2025 ( ஞாயிற்றுக் கிழமை) ஆய்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பயிற்சியினை மேற்கொண்டார்.

 மேலும் நடந்து முடிந்த சட்டசபை மானிய கோரிக்கை
யில் சுகாதாரத் துறைக்கு  அறிவித்த மாவட்டத்தின் இரண்டாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள தேர்ந்தெடுப்ப தற்கான இடம், தேவைகள் மற்றும் இதர வசதிகளை செய்து முடிக்க சுகாதார அலுவலர் மருத்துவர் கோவிந்தனிடம் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் இரண்டாம் நிலை அலுவலர்கள், சுகாதாரத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தென்பொதிகை நடை பயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள், வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கு பெற்று நடை பயிற்சி மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி