காவல்துறையினருக்கு சேமநல நிதி வழங்கிய தென்காசி எஸ்பி

தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை மற்றும் ஈமக்கிரியை தொகை போன்றவற்றை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி 12 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இவர்களுக்கு சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் காவலர் சேமநலநிதி உதவித்தொகையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி