தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 2016ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர் சந்தோஷ் மதுவில் விஷம் கலந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தங்கபாண்டி, அவரது மகள் பொன் செல்வி, மகன் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. தற்போது, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.