நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார்.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.