தென்காசி: போலி பாஸ் மூலம் கனிம கடத்தல்; நால்வர் கைது

புளியறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார், புளியறை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், மேலூரில் உள்ள குவாரியிலிருந்து கேரளத்திற்கு ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரிகளின் டிரான்சிட் பாஸ்கள் ஸ்கேன் ஆகவில்லை. போலியான பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்றதாக, சு. சண்முகராஜன் (29), தே. ராஜி (41), ம. சம்பத் (37), ரா. அரவிந்த் (40) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4 கனரக லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி