தென்காசி: கோயில் கொடை விழா கோலாகலம்

பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் விழா காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. 2ம் நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜையும், நள்ளிரவு சாம பூஜையும் நடைபெற்றன. 

நிறைவு நாளான நேற்று (ஜூன் 14) பொங்கலிடுதல், கிடா வெட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அம்மன் மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருசாமிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி