தென்காசி: பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் இன்று காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரக்கிளைகள், கற்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன. பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி