தென்காசி: கீழப்பாவூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ. சங்கர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் ஆகியோர் நேற்று இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளின் தரத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி