தென்காசி: சங்கரன்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை கருத்தரங்கம்

சங்கரன்கோவில் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் கடந்த இரண்டு நாட்கள் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட அளவிலான தோட்டக்கலை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 

இக்கருத்தரங்கில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சங்கரவேல், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் பிரேமலட்சுமி மற்றும் முனைவர் மணிவண்ணன், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் இளவரசன் மற்றும் பலசுப்பிரமணியம், சங்கரன்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருச்செல்வம், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி, பாக்டீரியாக்கொல்லி போன்றவை பயன்படுத்தப்படுவது குறைக்கப்பட்டு தேவையான நேரத்தில் தேவையான முறையில் தேவையான அளவில் பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள முடியும். 

இதனால் பயிர் மகசூல் மேம்படுவதோடு தரமான விளைச்சலையும் நல்ல விலையையும் விவசாயிகள் பெற இயலும். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கோபாலன் மற்றும் சுபாஷினி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடி தோட்டக்கலை திட்டங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

தொடர்புடைய செய்தி