தென்காசி: வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்

இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழிகாட்டுதலின்படி விவசாய விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் தென்காசி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

கடையநல்லூர் வேளாண் அறிவியல் மையம் (KVK) மூலம் இப்பிரச்சாரம் நேற்று மேலப்பாவூர், வெள்ளக்கால், இனாம்வெள்ளக்கால், துவரங்காடு மற்றும் இடையர்தவணை கிராமங்களில் நடைபெற்றது. இதில் காரீஃப் பருவ பயிர்களுக்கான புதிய இரகங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. 

வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை துறை, கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, கால்நடை மேம்பாடு, வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆதரவுடன், வெள்ளக்கால் கிராமத்தில் ட்ரோன் மூலம் நானோ DAP தெளிப்பு குறித்த செயல்விளக்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேலப்பாவூர், வெள்ளக்கால், இனாம்வெள்ளக்கால், துவரங்காடு மற்றும் இடையர்தவணை கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி