தென்காசி: காவலருக்கு கொலை மிரட்டல்; பாய்ந்த குண்டாஸ்

தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி யன் மகன் பாலமுருகன் (27). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் மீது பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிக்கு சென்ற காவலரிடம் பிரச்சினை செய்து மிரட்டல் விடுத்த வழக்கின் குற்றவாளியான செங்கோட்டை வாணியர் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் அண்ணாமலை ரஞ்சித் (24). இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் பிரச்சனை செய்த கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இவர் மீது செங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களின் ஈடுபட்டதால் இருவர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், பாலமுருகன் மற்றும் அண்ணாமலை ரஞ்சித் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி