தென்காசி: தவெக நிர்வாகிகள் ஆய்வு.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் கூட த.வெ.க. வெற்றி பெறவில்லை. அக்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், மாவட்ட செயலர் நியாஸ் மற்றும் கட்சியினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் தலையிட்டு அதிகாரம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கட்சியினருடன் சென்ற நியாஸ், அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, த.வெ.க. மருத்துவர் அணி செயலர் வாசுதேவி மருத்துவர் உடையில் மருத்துவமனையில் ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி